வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (17:07 IST)

#Pray_For_Nesamani! சென்னை மாநகர போலீஸ் வெளியிட்ட அதிரடி போஸ்டர்!!

#Pray_For_Nesamani என்னும் ஹேஷ்டேக் உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டனதையடுத்து சென்னை மாநகர போலீஸ் விழிப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
 
சமூக வலைதளங்களில் அவ்வபோது எதாவது ஒரு விஷயம் வைரலாகப் பரவி ட்ரண்ட் ஆகும். அதுபோல நேற்று திடீரென  #Pray_For_Nesamani எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரண்ட் ஆனது. 
 
டிவிட்டரில் ஒருவர் சுத்தியல் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு ‘இதற்கு உங்கள் நாட்டில் பெயர் என்ன?’ எனக் கேட்க அதற்குப் பதிலளித்த குறும்பர் ஒருவர் ‘இதுதான் சுத்தியல். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி (பிரண்ட்ஸ் பட வடிவேலு) இதனால் தாக்கப்பட்டார்’ எனக் குறிப்பிட்டார். 
 
உண்மை அறியாத மற்றொருவர் ‘ஓ.. இப்போது நேசமணி எப்படி இருக்கிறார்? எனக் கேட்டார். அவரின் வெகுளித்தனமானக் கேள்விக்குப் பதிலளித்த குறும்பர் ‘இப்போது நன்றாக இருக்கிறார். நாங்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து முதலுதவி செய்தோம் என கூறி #Pray_For_Nesamani என்னும் ஹேஷ்டேக்கை வெளியிட்டார். 
 
#Pray_For_Nesamani என்பதை பிடித்துக்கொண்ட நெட்டிசன்கள் அதையே டிரண்ட் செய்துள்ளனர். இப்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் முழுவதும் நேசமணிக்கான பிராத்தனைகளாகக் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சென்னை மாநகர போலீஸ் விழிப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
 
அதாவது #Pray_For_Nesamani ஹேஷ்டேக்கை கொண்டு ஹெல்மெட் அணிய கோரி வித்தியாசமாக விழிப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.