வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (07:51 IST)

மாண்டஸ் புயல்: சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் உதவி எண்கள் அறிவிப்பு!

helpline
மாண்டஸ் புயல்: சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் உதவி எண்கள் அறிவிப்பு!
வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழக கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது
 
நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சேதம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளன. அந்த உதவி எண்களை விபரங்கள் இதோ:
 
சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9445477205 என்ற  வாடஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்"  என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் தாம்பரம் மாநகராட்சியை தொடர்பு கொள்ள 18004251600, 
18004254355, 8438353355 (Whats App) என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva