வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (08:52 IST)

சென்னையை வாட்டி வதைக்க போகும் வெயில்: 3 நாட்களுக்கு வார்னிங்!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்ப காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதியோடு கத்திரி வெயில் முடிந்தது என நினைத்தால் இன்று வரை வெயிலின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. இதனால் தண்ணீர் பஞ்சமும் அதிகரித்துள்ளது. 
 
அதோடு கேரளாவில் நல்ல மழை பெய்தால் மட்டுமே  தமிழகத்திலும் மழை பெய்யும். குறிப்பாக ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் உருவாகியுள்ள வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.