அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் நேற்று மேலும் புதிதாக 203 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கி வருவதால் மக்கள் அம்மா உணவகங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள அம்மா உணவக ஊழியர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவருடன் பணி புரிந்தவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.