1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! மாநிலவாரி நிலவரம்!

India
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,306 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 10,887 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 5055 பேரும், டெல்லியில் 4,122 பேரும், ராஜஸ்தானில் 2,772 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,846 பேரும், தமிழகத்தில் 2,753 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலும், கூட்ட நெரிசலான பகுதிகளிலும் கொரோனா வேகமாக பரவுவதாக பலர் கூறி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
திருவான்மியூர் காய்கறி வியாபாரிக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்ட மார்க்கெட்