1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (08:00 IST)

மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

airport
சென்னையை நோக்கி மாண்டஸ் புயல் நெருங்கி வருவதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது சென்னையை நெருங்கி வருகிறது என்பதும் இந்த புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சற்று முன் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் பயணிகள், விமானங்கள், விமான சேவைகள் பாதிக்காத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் தான் புயல் கரையை கடக்கிறது என்பதால் பகல் நேரத்தில் விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
Edited by Siva