சென்னை விமான நிலையத்தில் 2000 கார் நிறுத்தும் பார்க்கிங்: எப்போது செயல்படும்?
சென்னை விமான நிலையத்தில் 2000 கார் நிறுத்தும் பார்க்கிங்: எப்போது செயல்படும்?
சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரம் கார்கள் நிறுத்தப்படும் வசதியுள்ள கார் பார்க்கிங் கட்டப்பட்டுள்ள நிலையில் அது எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி விமான பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள தற்போதைய பார்க்கிங் பகுதி மிகவும் பிசியாக இருப்பதால் புதிதாக பார்க்கிங் பகுதி கட்டப்பட்டது. ரூ.250 கோடியில் சுமார் 2 ஆயிரம் கார்கள் நிறுத்த கூடிய அளவுக்கு கார் பார்க்கிங் கட்டி முடிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த பிரம்மாண்டமான கார் பார்க்கிங் கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னை விமான நிலையத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங்கை திறந்து வைக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது
இந்த நிலையில் பழைய கார் பார்க்கிங் பகுதியையே இன்னும் ஆறு மாதங்களுக்கு பயன்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இப்போதைக்கு புதிய கார் பார்க்கிங் மக்களின் பயன்பாட்டுக்கு வராது என்று கூறப்படுகிறது
Edited by Mahendran