வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (08:44 IST)

சென்னை அருகே பயங்கர விபத்து: 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி

சென்னை அருகே ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் அந்த காரில் பயணம் செய்த ஐந்து இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் 5 பேர் நாளை இண்டர்வியூ ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு காரில் வந்துள்ளனர் 
 
அதன் பின்னர் திநகரில் பொருட்களை வாங்கிவிட்டு இரவு 12 மணியளவில் வண்டலூர் வரை காரில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளனர். சொகுசு காரை நவீன் என்பவர் ஓட்டி வந்த நிலையில் இந்த கார் திடீரென அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
சென்னைக்கு இன்டர்வியூ அந்த ஐந்து இளைஞர்கள் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது