1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (08:45 IST)

நிறம் மாறும் சென்னை நகர பேருந்துகள்: எடப்பாடிக்கு ராசியான கலரா?

நிறம் மாறும் சென்னை நகர பேருந்துகள்: எடப்பாடிக்கு ராசியான கலரா?
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமும், கருணாநிதிக்கு மஞ்சள் நிறமும் ராசியான நிறங்களாக கூறப்பட்டது. அவர்களது ஆட்சியில் இந்த இரண்டு நிறங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிகப்பு நிறம் ராசியான நிறம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பல துறைகள் சிகப்பு நிறத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் குறிப்பாக சென்னை நகர பேருந்துகள் சிகப்பு நிறத்திற்கு மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிறம் மாறும் சென்னை நகர பேருந்துகள்: எடப்பாடிக்கு ராசியான கலரா?
போக்குவரத்து துறை தற்போது கடுமையான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் ஊழியர்களின் நிலுவை பிஎப் பணம் உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தாமல், பேருந்துகளின் நிறத்தை மாற்றும் நடவடிக்கை இப்போது தேவையா? என்று போக்குவரத்து ஊழியர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.