வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:13 IST)

சென்னையில் விடிய விடிய மழை: மேலும் தொடரும் என அறிவிப்பு!

சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விடிய விடிய சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை பரவலாக மழை பெய்து உள்ளது 
 
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனை அடுத்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது