1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 டிசம்பர் 2020 (17:14 IST)

பொங்கல் பரிசு வழங்குவதில் தகராறு – டோக்கன் வழங்குவது நிறுத்தம்!

மதுரை அருகே பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் வழங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கொண்ட பையும், ரொக்க தொகையும் வழங்கி வருகிறது. அதே போல் 2021 ஆண்டும்  பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கி தலா ரூ.2,500 வழங்கப்படும் அறிவவித்தனர்.  மேலும் பணத்தோடு ஒரு கரும்பு, வெல்லம், சர்க்கரை முந்திரி திராட்சை ஆகியவற்றையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த பொருட்களை எல்லாம் தமிழகம் முழுவதும் ஜனவரி 4 ஆம் தேதி  13 ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும்  2 கோடியே 6 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்.

இந்நிலையில் இப்போது தமிழகம் முழுவதும் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் மதுரை அருகே ரேஷன் கடை அதிகாரிகள் மக்கள் வீட்டுக்கு சென்று கொடுக்காமல் சாலையில் வைத்துக் கொடுத்ததால் மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சலசலப்பு உருவானது. இதனால் டோக்கன் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.