வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (09:01 IST)

மின்சார ரயில் சேவையில் மாற்றம் - விவரம் உள்ளே!!

மின்சார ரயில் சேவையில் மாற்றம் - விவரம் உள்ளே!!
நாளை முதல் அடுத்த 6 நாட்களுக்கு மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
அதாவது, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3 வது ரயில் பாதை அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19 ஆம் தேதி வரை (6 நாட்கள்) நடக்கிறது. எனவே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டு உள்ளது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து 3.55 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 80 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.