வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:55 IST)

சென்னை ரயில்வே சேவையில் மாற்றம் – ரயில்வேதுறை அறிவிப்பு

சென்னை ரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்து தெற்கு ரயில்வேதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் கொரொனா  நோய்த்தொற்றுப் பரவல் குறைந்துள்ளதை அடுத்து, மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வார நாட்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறாது.  ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுமார் 202 மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி மின்சார பராமரிப்பு பணி காரணமாக ரயில்சேவையில் மாற்றம் செய்யவுள்ளதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை காலை 11.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்துயக்கப்படும்  மின்சார ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.25 க்கு இயக்க்ப்படும் ரயில், தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் வேளச்சேரியில் இருந்து இரவு 10;10 க்கு  இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.