வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:04 IST)

பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு- அமைச்சர் அறிவிப்பு

சமீபத்தில்  பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் என்பவர் அன்பு குறித்தும், சக மனிதர்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பது குறித்தும். மத ஒற்றுமை குறித்தும் அழகாக பேசி  மற்றவர்களைச் சிந்திக்கவைத்தார்.

இவரது அழகிய தமிழ் பேச்சு உலகம் முழுவதும் இணையதளத்தில் வைரலானது.

மாணவன் ஏ.அப்துல்கலாம் மற்றும் அவரது குடும்பத்தை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

இந்நிலையில், மனித நேயம் மத ஒற்றுமை குறித்து பேசிய பள்ளி மாணவர்  ஏ.அப்துக்கலாம் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர் காலி செய்யும்படி கூறியதால், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. எனவே குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக  நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு அமைச்சர் தா.மோ,அன்பரசன் தெரிவித்துள்ளார்.