1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (18:42 IST)

இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் – ரயில்வேதுறை அறிவிப்பு

வேலூர் காட்பாடி அருகேயுள்ள ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் மீது அமைத்திருக்கும் ரயில்வே மேம்பாலம் 38 வது தூண் மற்றும் 39 துயுண் பகுதியில் விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அப்பகுதியில் 4 நாட்களாக ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே ரயில்வே ஊழியர்கள் தொந்து சீரமைப்பு பணி   நேற்று இரவுடன் முடிவடைந்து சோதனை ஊட்டம் நடத்தப்பட்டது.

 இந்நிலையில், சென்னையில் இருந்து அரக்கோணம்  வழியாக காட்பாடி மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.