தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
- சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!
- சென்னை மெட்ரோ மேம்பால தூண்களில் விளம்பர பலகை.. வருவாய் ஈட்ட புதிய திட்டம்..!
- 15 வயது சிறுமி கர்ப்பம்.. 17 வயது சிறுவன் தான் காரணம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
- மீண்டும் உயர்கிறது தங்கம் விலை.. முதலீடு செய்ய சரியான நேரமா?
சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் மின்சார ரயில் வரும் ஜூன் 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் பணிமனையில் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் அதிகாலை இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை சென்ட்ரலில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ஜூன் 19, 20 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
