புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (14:59 IST)

ஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசின் புதிய உத்தரவால் தமிழக மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களில் ஒன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம். இந்த போராட்டம் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசின் புதிய உத்தரவு ஒன்றால் தஞ்சை பகுதி மக்கள் மட்டுமன்றி தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் 
 
இந்த உத்தரவின்படி தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அதுமட்டுமன்றி மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
இந்த அரசாணையால் தஞ்சை பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பெரிய திட்டம் ஓரிடத்தில் செயல்படுத்தும் போது அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களின் கருத்து கேட்கும் கூட்டமும் மிக அவசியம் என்ற நிலையில் இப்படி ஒரு அவசர அரசாணையை மத்திய அரசு பிறப்பித்தது ஏன் என தஞ்சை பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த அரசாணையல் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது