1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:25 IST)

எஸ்.பி.பி குணமாக ஜி.வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட வீடியோ

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை பாடி கூட்டுப் பிரார்த்தனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பிரார்த்தனையில் கமல், ரஜினி உள்பட திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவருக்காக ஏற்கனவே பல்வேறு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 

இந்த நிலையில் தற்போது ஒரு கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதாவது நாளை மாலை 6.05 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டு பிரார்த்தனையில் கமலஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா, இளையராஜா, ஏஆர் ரகுமான், வைரமுத்து உள்பட பலர் தங்களது வீடுகளிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமானஜி.வி. பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணி விரைவில் குணமடைய வேண்டுமெனப் பேசி வீடியோ வெளிடுடுள்ளார்.