1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (11:59 IST)

தூங்கும்போது சார்ஜ் போட்ட செல்போன் வெடித்து வாலிபர் பலி: மனைவி கண்முன்னே நிகழ்ந்த சோகம்

Fire
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தூங்கும்போது செல்போனுக்கு சார்ஜ் போட்ட வாலிபர் செல்போன் வெடித்ததால் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தை தூங்கியவுடன் அருகிலுள்ள ஓலைக்குடிசையில் தூங்குவதற்காக சென்றார்
 
அப்போது அங்கு அவர் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென செல்போன் வெடித்து தீப்பிடித்து உள்ளது. அந்த தீ ஓலைக்குடிசையிலும் பற்றியதை அடுத்து அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கதறியுள்ளார் 
 
கணவனின் கதறல் சத்தம் கேட்டு மனைவி அக்கம்பக்கத்தாரை எழுப்பி தனது கணவரை காப்பாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்