வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (16:22 IST)

ரசிகரின் செல்போனை உடைத்த ரொனால்டோ… போலிஸார் விசாரணை

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 14 வயது சிறுவன் ஒருவனின் செல்போனை தட்டிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஒரு போட்டியின் போது 14 வயது சிறுவன் ஒருவன் இவரை வீடியோ எடுக்கும்போது வேகமாக அவனின் செல்போனை தட்டிவிட்டார். அதில் அந்த செல்போன் உடைந்தது. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து ரொனால்டோ வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது இது சம்மந்தமாக போலிஸார் ரொனால்டோவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.