1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (13:18 IST)

டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமரா..! ஒப்பந்ததாரர்களுக்கு பறந்த உத்தரவு..!!

cctv camera
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொறுத்த மதுவிலக்குத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். 
 
அந்த உத்தரவில், “மக்களவைத் தேர்தலின் போது சர்ச்சைகள் ஏற்பட வாய்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பார்களில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் அதற்கான புகைப்படங்களையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது என்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தத் தவறும் பட்சத்தில் டாஸ்மாக் பார்களின் ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு மதுவிலக்குத்துறை ஆணையாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.