வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (11:37 IST)

+2 மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? – சிபிஎஸ்சி விளக்கம்!

கொரோனா காரணமாக +2 சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சிபிஎஸ்சி பள்ளிகளில் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மதிப்பெண் ஒதுக்கீடு முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்புகளில் பெற்ற 30% மதிப்பெண்கள், +2 வகுப்பில் செய்முறை தேர்வு, அலகு தேர்வு உள்ள்ளிட்டவற்றை கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்துள்ள முதல் மீன்று பாடங்களும் கணக்கில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக மதிப்பெண்களை கணக்கிட்டு ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.