வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (07:37 IST)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் 3 பேரை கைது செய்த சிபிஐ

கடந்த ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கடந்த ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மாணவி ஒருவர் தைரியமாக காவல்துறையில் புகார் செய்ததை அடுத்து இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு ,சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றபட்டது. சிபிஐ அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர் என்பதும் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது திடுக்கிடும் திருப்பமாக இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மேலும் ஒருசிலர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது