முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் உள்ள மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், அதேபோல் வேலாயுதம்பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகவும், அதனால் அவர் கைது நடவடிக்கையை தவிர்க்க வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் முன் ஜாமின் கேட்டு எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சிபிசிஐடி சோதனை என்ற தகவல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran