1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (16:40 IST)

சிபிசிஐடி விசாரணை வளையத்தில் கள்ளக்குறிச்சி போலீசார்..கண்ணுக்குட்டியிடம் மாமூல் வாங்கினார்களா?

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்று தெரிந்தது. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை வளையத்தில் கள்ளக்குறிச்சி போலீசார் இருப்பதாக கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு டிஎஸ்பிக்கள் மற்றும் 9 காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐசிஐடி திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சிபிசிஐ போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
குறிப்பாக கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைதான கண்ணூகுட்டியிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 
கருணாபுரம்  பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய் விற்பனை நடந்து வருவது தெரிந்தும் காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran