திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (09:19 IST)

போலி ஆதார் அட்டை; தமிழகத்தில் சுற்றி திரிந்த அங்கொட லோக்கா! – சிபிசிஐடி விசாரணை

இலங்கை நிழல் உலக தாதா அங்கட லோக்கா தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை நிழல் உலக தாதாவான அங்கொட லோக்கா கோயம்புத்தூரில் பிரதீப் என்ற போலி ஆதார் ஐடியை காட்டி தங்கி வந்த நிலையில் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக இலங்கை ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் அங்கொட லோக்கா தமிழகத்தில் தங்க போலி ஐடி தயாரித்து வழங்கியது மற்றும் உதவி செய்தது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லோக்காவின் ஆதார் ஐடி போலியானது என தெரிய வந்த நிலையில் மதுரையில் அங்கொட லோக்கா தொடர்பான இடங்களில் சிபிசிஐடியினர் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.