கேலோ- இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு-! தமிழ்நாடு 2- வது இடம்
தமிழகத்தில் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய கேலோ இந்தியா போட்டி சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேஇந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இதில், மஹாராஷ்டிரா மாநிலம் தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம்,38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும்;
ஹரியானா மாநிலம், 35 தங்கம், 2 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களுடன் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த முறை 8 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு ஹரியானாவை பின்னுத்தள்ளி முதன்முறையாக 2 வது இடம் பிடித்துள்ளது. இது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு கேலோ இந்தியா விளையாட்டு விழா நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.