1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (15:30 IST)

காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு..! அருவி போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்..!

water wastage
திருப்பத்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு பகுதியில் திருச்சியில் இருந்து இராமநாதபுரம் வரை செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இன்று காலை  விரிசல் ஏற்பட்டு சுமார் 50 அடி உயரத்துக்கு தண்ணீர் பீச்சி  அடித்தது.  அருவி போல் கொட்டும் தண்ணீரில் சிறுவர்கள் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறியது.
 
சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும், தண்ணீர் பீச்சி அடிப்பதை பார்த்து செல்போனில் வீடியோ எடுப்பதும் செல்பி எடுப்பது மாதிரி இருந்தனர். தகவல் அறிந்து வந்த தொழிலாளர்கள் தண்ணீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் இவ்வழிதடத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து உடைப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்