செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (14:01 IST)

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிக தடை

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
எஸ்பிஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை தொடர்ந்து, டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்,  சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏடிஎம்-களில் சென்சாரை மறைத்து வடமாநில கொள்ளை கும்பல் ரூ.10 லட்சம் வரை பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் முழிவுக்கு வந்ததும் மீண்டும் இந்த தடை விளக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.