1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (10:58 IST)

ஆளுநருக்கு எதிராக போராட்டம்.! 178 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.!!

governor ravi
சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய 178 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி.எஸ்டி  பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட  பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சாரிபில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார். 

protest
இந்தசூழலில்  மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பழகலைக் கழக வேந்தர் ஜெகநாதனை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சேலம் சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மாணவர் இயக்கங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.