விஸ்வரூபம் 2 படத்திற்கு வந்தது சிக்கல்: சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!

Updated: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (20:37 IST)
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விஸ்வரூபம் 2 படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த படத்தை வெளியிட தடை விதிக்ககோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
 
இந்த படத்திற்காக கொடுக்கப்பட்ட பணத்தை உன்னைபோல் ஒருவன் படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது விஸ்வரூபம் 2 படத்திற்கும் கமல் பலரிடம் கடன் வாங்கியிருப்பதால், கமல் மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.
 
இல்லையெனில், விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்
Show comments