ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (14:15 IST)

சசிகலாவை கிண்டலடித்த இயக்குனர் மனோபாலா மீது புகார்...

சசிகலாவை கிண்டலடித்த இயக்குனர் மனோபாலா மீது புகார்...
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து, இயக்குனர் மனோபாலா, தனது வாட்ஸ் அப் குரூப்பில், கிண்டலான வாசகத்தை பதிவு செய்ததாக அதிமுக பிரமுகர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
ஜெ. உயிரோடு இறந்து போது, இயக்குனர் மனோபாலா அதிமுகவின் பிரச்சார பேச்சாளராக இருந்தார். ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் அதிமுகவிலிருந்து விலகியே இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சசிகலா பற்றி கிண்டலான ஒரு வாசகத்தை அவர் தனது வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்திருந்தார். 

சசிகலாவை கிண்டலடித்த இயக்குனர் மனோபாலா மீது புகார்...

 

 
அதைத்தொடர்ந்து அதிமுக பிரமுகர் ஆலந்தூர் சினி.சரவணன் மனோபாலா மீது இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.