Daily Horoscope
✕

ஆ ராசா மீது வழக்குப் பதிவு – அதிமுக வழக்கறிஞர் புகாரை ஏற்ற போலீஸார்!

Updated: சனி, 12 டிசம்பர் 2020 (16:55 IST)
அதிமுக மற்றும் அதன் முன்னாள் தலைவர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்த திமுக எம் பி ஆ ராசா மீது போலிஸார் புகார் பதிவு செய்துள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் என ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பேசப்பட்ட 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளன. ஒருவருடமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் 2 ஜி ஊழல் பற்றிய விமர்சனங்கள் எழுந்த போது திமுக எம் பி ஆ ராசா ஜெயலலிதாவையும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதனால் இரு கட்சியை சேர்ந்தவர்களும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன் ஆ ராசா மீது போலிஸில் புகார் அளித்தார். இதையடுத்து இப்போது சென்னை போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

எல்லாம் காட்டு

கனமழை எச்சரிக்கை: நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? கல்வி அமைச்சர் தகவல்..

தனியார் நிறுவனங்களுக்கு முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரிக்கை! கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் புறக்கணிப்பா?

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் டுவோ தட்டுப்பாடு: பிளாக்கில் கூடுதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை..

வங்கக்கடலில் தீவிரவடையும் 'அர்னாப்' புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகள் நாளை விடுமுறை..

நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய மெர்சிடீஸ் கார் மோதி விபத்து.. வியாபாரி நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments