4 ஆவது நாளாக தொடரும் சிஏஏ போராட்டம்..

Arun Prasath| Last Modified திங்கள், 17 பிப்ரவரி 2020 (08:07 IST)
சென்னை வண்ணாரப்பேட்டையில் நான்காவது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14 ஆம் தேதி இரவில் திடீரென இஸ்லாமியர்கள் பலரும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கினர். அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் பலரும் காயம்பட்டனர்.

இந்த தாக்குதலை குறித்து எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தடியடியை கண்டித்து மதுரை, திருப்பூரில் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே போல் மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியிலும்  4 ஆவது நாளாக போராட்டம் தொடருகிறது.இதில் மேலும் படிக்கவும் :