வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வியாழன், 4 டிசம்பர் 2025 (12:30 IST)

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி  ஆனந்த்..
தலைவர் விஜய் வருகிற 5ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கரூர் சம்பவம் காரணமாக தமிழக காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே அதே தேதியில் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டார் விஜய். இதற்காக அல்லு அர்ஜுனா, புஸ்ஸி  ஆனந்த் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் புதுச்சேரி காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் அவர்களிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை

 
ஒருகட்டத்தில் விஜயின் ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது.. வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என புதுச்சேரி போலீசார் தெரிவித்துவிட்டனர். அதன்பின் கிழக்கு கடற் சாலையில் ரோட் ஷோ நடத்திக் கொள்கிறோம் என போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தவெக நிர்வாகிகள் பேசினார்கள். அதற்கும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாகவே புஸ்ஸி  ஆனந்த், அல்லு அர்ஜுனா ஆகியோர் புதுச்சேரி டிஜிபி, ஐஜி போன்ற போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்கள். முதல்வர் ரங்கசாமியையும் நேரில் சந்தித்து இதுபற்றி பேசினார்கள். அதன்பின் முதல்வர் ரங்கசாமியும் உயர் அதிகாரிகளுடன் இதுபற்றி ஆலோசித்தார். அதன்பின்னரும் விஜயின் ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக தெரிகிறது.
 
நடக்கும் சூழ்நிலையை பார்க்கும் போது புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ நடத்த அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது. எனவே பொதுக்கூட்டம் மட்டுமே நடக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. புஸ்ஸி  ஆனந்த் புதுச்சேரியில் புஸ்ஸி  என்கிற தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். அது அவரின் சொந்த ஊரும் கூட. பல போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்புள்ளவர். முதல்வர் ரங்கசாமியுடனும் அவருக்கு பழக்கம் உண்டு. அப்படி இருந்தும் அவரால் காரியத்தை சாதிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.