1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 டிசம்பர் 2025 (12:49 IST)

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

nainar nagendran
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெ) இணைந்திருப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் செய்துள்ளார். செங்கோட்டையனின் இந்த முடிவை துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது போன்றது என்றும், இது தோல்விக்கே இட்டு செல்லும் என்றும் அவர் ஒப்பிட்டார்.
 
தவெக கட்சிக்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்றும், செங்கோட்டையனின் இந்த தாவல் அரசியல் சமன்பாடுகளை மாற்றாது என்றும் நயினார் நாகேந்திரன் வாதிட்டார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்றும், பீகாரை போலத் தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நிச்சயம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் பேரதிர்ச்சி அடைந்ததாக கூறிய செங்கோட்டையன், தவெகவில் இணைந்த பின், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தற்போது ஒன்றாகவே பயணிக்கின்றன என்று குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva