திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick

புதுச்சேரி – தமிழகம் இடையே பேருந்து இயக்கம் : அரசு அனுமதி!

நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி – தமிழகம் இடையே பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. மூன்று கட்ட ஊரடங்குகள் முடிந்து தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு வகையான தொழில்களுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போக்குவரத்து தொடங்குவது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்துள்ளது. சென்னையில் 200 பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்பட உள்ளன. இன்னமும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில், முதன்முறையாக யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலிருந்து காரைக்கால், நாகப்பட்டிணம் வழியாக காரைக்கால் வரை செல்லும் பேருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தமிழகம் வழியாக செல்வதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியளர்கள் உரிய பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளனர்.