1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (18:11 IST)

எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை: போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சற்றுமுன் எச்சரிக்கை செய்து இருந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு செய்துள்ளனர். எந்தவித மிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் வேலைநிறுத்தம் நிச்சயமாக நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் 
 
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
மேலும் 95% தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர் என்றும், வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.