27 மாவட்டங்களில் கட்டுபாடுகளுடன் பேருந்து சேவை துவக்கம்!
ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கியது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் 50% பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் ஓட தொடங்கியது. பேருந்துகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்றும் முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 9,333 பேருந்துகள் தளர்வளிக்கப்பட்ட மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், குளிர் சாதன வசதி இல்லாமல் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.