1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (15:25 IST)

ஓடும் பேருந்தில் திடீரென வெளியே குதித்த டிரைவர் பலி.. பேருந்தில் இருந்த 30 பயணிகள் அதிர்ச்சி..!

ஓடும் பேருந்தில் இருந்து திடீரென  டிரைவர் வெளியே குதித்ததால் பேருந்தில் இருந்த 30 பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெளியே குதித்த பேருந்து ஓட்டுனர் படுகாயம் அடைந்து சிகிச்சையின் பலன் இன்றி காயமானார்
 
 மதுரையிலிருந்து தேனை நோக்கி 30 பயணிகளுடன் அரசு பேருந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஆண்டிப்பட்டி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் தங்கபாண்டியன் என்பவர் பேருந்தில் இருந்து வெளியே குதித்து விட்டார்.  பேருந்து சாலையோரம் இருந்த முள்வேலி மீது மோதி சிறிய சேதாரத்துடன் நின்றது, பயணிகள் யாருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை. 
 
ஆனால் பேருந்தில் இருந்து வெளியே குதித்த ஓட்டுனர் தங்கபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்று உள்ளே
 
Edited by Mahendran