வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஜனவரி 2018 (21:55 IST)

தமிழகத்தில் தடையின்றி 66% பேருந்துகள் இயக்கம்...

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள்  பணிபுரிந்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இன்று மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்  நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
 
இது வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிவரை 66.49% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் 84.91% விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மாநகரப் பேருந்து 33.2%, அரசு விரைவு பேருந்து 84.91% இயக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம். எவ்வித நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயராக உள்ளோம். நாங்கள் அடிபணியமாட்டோம். அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்மானத்திற்கு வரும் வரை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.