திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (16:24 IST)

சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள்.. சினிமா தயாரிப்பாளரா?

சாலையில் தீப்பிடித்து எறிந்த காரில் கட்டுக்கட்டாக போலி 2000 ரூபாய் நோட்டு இருந்ததாகவும் அந்த கார் ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது என்பதால் சினிமா தயாரிக்க அந்த பணம் பயன்படுத்தப்பட்டதா என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம்  என்ற தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து அந்த காரில் கட்டு கட்டாக போலி 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
 
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத் துறையின் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் சங்கத்தேகத்தின் பெயரில் கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த காருக்கு சொந்தக்காரர் சினிமா தயாரிப்பாளர் என்றும் படப்பிடிப்புக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்த எடுத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran