பிரிட்டிஷ் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் திருப்பம் : தமிழக வாலிபர் கைது

girl
Last Updated: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (16:38 IST)
கோவாவில்  சில நாட்களுக்கு முன் பிரிட்டிஷ்  நாட்டுப் பெண் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு  சம்பந்தமாக தஞ்சாவூரைச் சேர்ந்த எல்லப்பன் (30) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவா மாநிலத்தில் திவிம் பகுதிக்குச் செல்ல வேண்டுமென கனனோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த பிரிட்டிஷ் நாட்டுப்பெண் ரயில் வர தாமதம் ஆகவே தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கொண்டிருக்கும் போது, அவரை பின் தொடர்ந்து சென்ற எல்லாப்பா பாலோலேம் பகுதியில் பெண்ணைத்தாக்கி, பலாத்காரம் செய்துவிட்டு அவர் கைப்பையில் வைத்திருந்த 20 ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்.
 
இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் கனனே பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிந்த காட்சிகளை சோதனை செய்தனர். அதில்  எல்லப்பா பிரிட்டிஷ் பெண்ணை பின் தொடர்ந்து செல்வது தெரியவந்தது.
 
இந்நிலையில் அனைத்து போலீஸ் ஸ்டேசன்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து மார்கோ பகுதியில் சுற்றித்திரிந்த எல்லப்பாவை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகின்றன.
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :