தாலி கட்டிய அடுத்த அடுத்த சில மணி நேரங்களில் தந்தையை மணமகன்: அதிர்ச்சி தகவல்
நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டிய அடுத்த சில மணி நேரங்களில் அவரது பரிதாபமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மகனுக்கு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இரு வீட்டாரும் பேசி நேற்று முன்தினம் நாகர்கோவில் உள்ள மணமகள் வீட்டில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்
கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக இந்த திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டிய ஒரு சில நிமிடங்களில் திடீரென மணமகனின் தந்தை மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
மேலும் இறந்த நபருக்கு கொரோனா சோதனை செய்யவும் மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், மணமகன், மணமகள் உள்பட பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
தாலி கட்டிய சில நிமிடங்களில் தந்தையைப் பறிகொடுத்த மணமகனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது