ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : புதன், 10 ஜனவரி 2024 (22:01 IST)

ஒரு மணி நேரத்தில் மணப்பெண் அலங்காரம்! – 38 பெண்கள் புதிய சாதனை!

Bridal Makeup
5 வது முறையாக உலக சாதனை நிகழ்ச்சி நடத்தி அசத்திய குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம்


 
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில்  மணபெண் அலாங்கார அழகு கலை உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு மணி நேரத்திற்குள் மணப்பெண் அலங்காரத்தை முடித்து 38 பெண்கள் உலக சாதனை படைத்தனர் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள  அழகு கலை நிபுணர்கள் பலர் கலந்து  கொண்டனர்

 
குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.சித்ரா குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்சியில்

ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.எம்.தமிழன் வடிவேல், தொழிலதிபர் டாக்டர்.VRS.ஸ்ரீதர், P.தங்கவேல், காங்கிரஸ் கட்சியின் IT பிரிவு மாநில செயலாளர் முருகன், ஸ்ரீ சாய் இல்லம் அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயலட்சுமி குமார்,ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உலக சாதனை புரிந்த 38 பெண்களுக்கு "தி கிரேட் இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட்" மூலம் உலக சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் இந் நிகழ்ச்சியில் பல்வேறு பெண்கள்   அமைப்பு சங்கத்தை சார்ந்த பல சங்க நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.