வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (21:04 IST)

ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில் உலக சாதனை

oyilattam dance
கரூர் அருகே வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில் 2200-க்கும் மேலான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர்.
 
கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பகுதியில் குளக்கரை ஸ்ரீ வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இரவு ஊர் மைதானத்தில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
 
நிகழ்ச்சியை முன்னிட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2200-க்கும் மேற்பட்ட  ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடை அணிந்து ஒயிலாட்டம் ஆடினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று கண்டு ரசித்தனர். 
 
குளக்கரை ஸ்ரீ வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சியில் 2200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் டிஸ்கவர் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.