செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2022 (13:38 IST)

நாளை புத்தக விநியோகம் - முதல் வாரம் பள்ளி வகுப்புகள் எப்படி இருக்கும்?

பள்ளி திறக்கும் நாளே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது என தகவல். 

 
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றது.  1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளி நாளை திறக்கப்படும் நிலையில் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதி, 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
கொரோனா  காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடந்த நிலையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில்  2022 - 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளது.

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பள்ளி திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை முன்னதாக தெரிவித்தது. 
 
அதன்படி நாளையே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பள்ளி திறந்த பின்னர் தன புத்தகங்கள் வழங்கப்படுவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் பள்ளிகளில் முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உலவியல் ரீதியான வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். அதற்கு அடுத்த வாரத்தில் வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.