வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2022 (08:03 IST)

இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 217 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,57,133 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 145 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,939 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.