1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (15:53 IST)

தமிழக பள்ளிகளில் புத்தகமில்லா தினம் கடைபிடிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
 
6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது.