வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (15:35 IST)

பொங்கலையொட்டி ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் - அமைச்சர் சா.மு. நாசர் தகவல்

ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு  போனஸ் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஆவின் நிறுவனத்தின் பணியாற்றி வரும் 27,189 ஊழியர்களுக்கு  போனஸ் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளார்களிடம் கூறியதாவது:

ஆவினில் வரும் கோடைகாலத்தில் புதிய வகை ஐஸ்கிரீம் கொண்டு வரப்படும்; ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில், சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு 3,200 டன் இனிப்புகள் தயாரிக்கவுள்ளதாகவும் கூறினார்.

மேலும்,பொங்கல் பண்டிகையொட்டி ஆவின் நிறுவனத்த்லி பணியாற்றி வரும் 27,289 ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பொங்கல் போனஸாக ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.